10331 விமான ஒளிப்படங்கள்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 2வது பதிப்பு, ஜுலை 1997, 1வது பதிப்பு, டிசம்பர் 1978. (யாழ்ப்பாணம்: டினேஷ் அச்சகம், கல்வியங்காடு).

(3), 49 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 60.00, அளவு: 20.5×14 சமீ.

புவியியல்துறை மாணவர்கள், Air Photo Interpretation எனப்படும் விமான ஒளிப்படங்களைப் புரிந்துகொள்ளும் முறைமை பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ளத்தக்க நூல் இதுவாகும். இந்நூலின் முற்பதிப்பு தட்டச்சு வடிவில் 1978இல் வெளிவந்திருந்தது. சிறிய நூலாயினும் புதிய பல விபரங்களையும் அறிவுபூர்வமான அணுகலையும் கொண்டிருக்கின்றது.  பட்டப்படிப்பு மாணவர்களுக்கு விமானப்படங்கள் குறித்த தெளிவான விளக்கங்களை இந்நூல் தருகின்றது. நிலவளவைத்துறையினரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட விமானப்படங்கள் இந்நூலில் விளக்கப்பட்டிருக்கின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 120761). 

விமான ஒளிப்படங்கள்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 3வது பதிப்பு, டிசம்பர் 2004, 1வது பதிப்பு, டிசம்பர் 1978, 2வது பதிப்பு, ஜுலை 1997. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை).

56 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், ஒளிப்படங்கள், விலை: ரூபா 120.00, அளவு: 20.5×13.5 சமீ., ISBN: 955-1013-09-3.

விமான ஒளிப் படங்களின் வகைகள், நிலைக்குத்து ஃ சாய்வு விமானப் படங்கள், விமானப் படங்களின் சிறப்பு, போலி நிறங்கள், இலங்கைக்கான விமானப் படங்கள், விமானப் பட வான் பாதை, விமானப் படங்களில் இணைப்பு, விமானப் படங்களைப் புரிந்துகொள்ளல், விமானப் படங்களை வாசித்தல், விமானப் படங்களை விளக்கல், புவியியல் நிலத்தோற்றம், இடவிளக்கவியற் படங்களும் விமானப் படங்களும், விமானப் படங்களின் புவியியல் அம்சங்கள் ஆகிய 13 தலைப்பகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4349).

ஏனைய பதிவுகள்

11287 மொழிதல்: ஆய்விதழ் 2: எண் 2.

சு.சிவரெத்தினம் (பிரதம ஆசிரியர்), வ.இன்பமோகன், சி.சந்திரசேகரம் (உதவி ஆசிரியர்கள்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம், 110/3, கண்ணகி அம்மன் கோவில் வீதி, 10ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, மார்கழி 2015. (கொழும்பு 6: குமரன்