10336 பௌதிகச் சூழல்: காலநிலையியல்.

க.குணராசா, ஆ.இராஜகோபால். யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 2வது பதிப்பு, மார்ச் 1984, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1979. (யாழ்ப்பாணம்: விவேகானந்த அச்சகம்).

(2), 100 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 20.00, அளவு: 21×13.5 சமீ.

புதிய புவியியல்  என்ற பதம் எண்பதுகளின் ஆரம்பத்தில் நவீன கல்வி உலகில் முக்கிய இடம்பெற்றிருந்தது. கல்வியுலகில் புவியியல் நோக்கும் பொருளும் (Scope and Content) காலந்தோறும் புதுப்பிக்கப்பட்டே வந்துள்ளதாயினும் இன்றைய புதிய புவியியல் என்பது நடைமுறைப் புவியியல் என்ற சமூக அபிவிருத்திப் பண்பியலாக பயன்படுத்தப்படுகின்றது. இந்நூல் மேற்கூறிய அடிப்படையில் இலங்கைக் கல்வி அமைச்சு வகுத்த கல்வித் திட்டத்தை ஒட்டி உருவாகியுள்ளது. பாடநிலையில் மட்டுமல்லாது, மாணவரின் உள்ளுர் காலநிலை பற்றிய விருத்தியையும் ஆளுமையையும் மனதிற்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வளிமண்டலம், சூரியக் கதிர்-வீச்சு-பெற்ற வெயில், ஈரப்பதன் படிவு வீழ்ச்சி-நீரியல் வட்டம், அமுக்கமும் காற்றுக்களும், உலகின் பிரதான காலநிலைப் பிரிவுகள், உலகின் இயற்கைத் தாவரம் ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எளியநடையில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 2039).     

பௌதிகச் சூழல்: காலநிலையியல்.

க.குணராசா, ஆ.இராஜகோபால். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 4வது பதிப்பு, ஓகஸ்ட் 1994, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1979. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி அச்சகம், 2ஃ5, துரைராசா வீதி, வண்ணார்பண்ணை).

(4), 112 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13.5 சமீ.

வளிமண்டலம், சூரியக் கதிர்வீச்சு: பெற்ற வெயில், நீரியல் வட்டம், ஈரப்பதனும் மழைவீழ்ச்சியும், அமுக்கமும் காற்றுக்களும், கோட்காற்றுக்கள், சூறாவளிகள், வளிமண்டலப் பொதுச் சுற்றோட்டம், உலகின் காலநிலைப் பிரதேசங்கள், உலகின் இயற்கைத் தாவரம், வானிலைக் கருவிகள், மண் ஆகிய பன்னிரு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 69920).

ஏனைய பதிவுகள்

Majestic Slots Avis Germinal 2024

Satisfait Majestic Slots Club Gaming Majestic Slots Salle de jeu: Les attraits Ou Les Désagréments Badinages Au sujet des Appareil Pour En compagnie de Quelque peu

Mob $1 deposit wolf run Museum

Articles Enjoy Far more Ports Of Habanero | $1 deposit wolf run Wager size and you will profits This has been shared 0 moments Haunted