10338 நுண்ணுயிரினவியல்: திருத்திய பாடத்திட்டம் அலகு 13: க.பொ.த.உயர்தரம்- உயிரியல்.

மாலினி செந்தில்மணி. கொழும்பு 6: திருமதி மாலினி செந்தில்மணி, 25, 4/1 டாக்டர் ஈ.ஏ.கூரே மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

106 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-41095-0-6.

புதிய பாடத் திட்டத்திற்கமைவாக மாணவர்களின் சுயகற்றலுக்கு உதவியாக குறிப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நூல் நுண்ணங்கிகளின் பல்வகைமை, தொற்று நோய்கள், மனித உடலின் தற்காப்புப் பொறிமுறை, நுண்ணங்கிகளைக் கட்டுப்படுத்தல், கைத்தொழிலிலும் விவசாயத்திலும் நுண்ணங்கிகளின் பயன்பாடு, தாவர வளர்ச்சிக்குத் தொடர்புடைய மண் நுண்ணங்கிகள், குடிநீர், கழிவுநீர் நுண்ணங்கிகள், திண்மக் கழிவு முகாமைத்துவம், உணவின் நுண்உயிரினவியல், உணவு நற்காப்பு ஆகிய பத்து பாடத்தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 68091). 

ஏனைய பதிவுகள்