என்.செல்வராஜா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அமரர் மு.ஸ்ரீ விக்கினேஸ்வரன் குடும்பத்தினர், ஈஸ்வர இல்லம், மானிப்பாய் வீதி, ஆனைக்கோட்டை, 1வது பதிப்பு, மே 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
viii, 118 பக்கம், புகைப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-43274-0-5.
யாழ்ப்பாணம், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் போதனாசிரியராக, விரிவுரையாளராக, உப அதிபராக, அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அமரர் மு.ஸ்ரீ விக்கினேஸ்வரனின் (04.09.1936-22.04.2016) மறைவையொட்டி வெளியிடப்பெற்ற நினைவஞ்சலி மலர். அஞ்சலி உரைகள், திருமுறைத் தொகுப்புகளுடன், எட்டு உளநல, உடல்நல மருத்துவக் கட்டுரைகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. நீரிழிவு-சலரோகம்-சர்க்கரை வியாதி (வைத்திய கலாநிதி சிவ.தியாகராஜா), மாரடைப்பு (வைத்திய கலாநிதி க.லக்ஷ்மன்), முதுமையும் மன ஆரோக்கியமும் (வைத்திய கலாநிதி தி.குமணன்), உயர் குருதி அமுக்கம் ((வைத்திய கலாநிதி ரீ.பேரானந்தராசா), ஞாபக மறதி நோய் (வைத்திய கலாநிதி ஸ்ரீ நகுலேஸ்வரன்), நிறைவான உணவை உண்டு வளமாக வாழுவோம், நீரிழிவு நோயாளிகளின் பாதங்களைப் பாதுகாப்போம், உடற்பயிற்சியின் மகத்துவம் (வைத்திய கலாநிதி எஸ்.கேதீஸ்வரன்) ஆகிய கட்டுரைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.