இ. சபாரத்தினம். தெல்லிப்பழை: இ.சபாரத்தினம், யோக சபா, 2வது பதிப்பு, 1980, 1வது பதிப்பு, 1969. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
68 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 7.50, அளவு: 21.5×14 சமீ.
சாதாரணமாக எவரும் பழகக்கூடிய இலகுவான, பதினெட்டு ஆசனங்களின் விளக்கங்கள் படங்களுடன் இந்நூலில் தரப்பட்டுள்ளன. சித்த வைத்தியர் திரு. இ.சபாரத்தினம் அவர்கள், மதுரை சித்த மருத்துவக் குருகுலத்தில் பயின்று ‘சித்த மருத்துவ பண்டிற்’ என்ற சான்றிதழும், தங்கப் பதக்கமும், மற்றும் ‘வைத்திய பூபதி’ என்ற பட்டமும் பெற்றவர். யோகாசனக் கலையை இந்திய நிபுணர்களிடம் மிகவும் நுணுக்கமாகப் பயின்றிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2873).