10346 சிதானந் யோக.

ஸ்ரீ சிதானந்த யோகி. யாழ்ப்பாணம்: ஸ்வாமி ஸ்ரீ சிதானந்த யோகி, நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: வஸ்தியான் அச்சகம், 392, பிரதான வீதி).

(21), 60 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

யோகாசனக் கலாநிதி, ஸ்வாமி ஸ்ரீ சிதானந்த யோகி அவர்கள் எழுதிய நூல்.  மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆரம்பத்தில் யோகாசனப் பயிற்சிகளை மேற்கொண்டுவந்த இவர், 1971 ஆவணி முதல் நல்லை ஆதினகர்த்தா ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகளின் வேண்டுகோளின்பேரில் யாழ்ப்பாணத்துக்கு வந்து நல்லூரில் அப்பயிற்சிகளை மேற்கொண்டு பல இளம் தலைமுறையினருக்கு யோகாசனப் பயிற்சிகளை வழங்கியிருகின்றார். சிதானந்த யோகம் தொடர்பாக இந்நூல் விரிவான பயிற்சிமுறைகளை வழங்குகின்றது.(இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26991).

ஏனைய பதிவுகள்