10347 மூளை நரம்பியல் சிகிச்சை (Cerebro Neural Therapy-CNT): மருத்துவத்தில் மறுமலர்ச்சி.

மருது கந்தப்பு. லண்டன்: பேராசிரியர் மருது கந்தப்பு, 2வது பதிப்பு, செப்டெம்பர் 2010, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (சென்னை 600 002: BKI Graphics ஐயா முதலி தெரு, சிந்தாரிப்பேட்டை).

(6), 194 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-52739-1-6.

CNT சிகிச்சைமுறையை லண்டனில் வாழ்ந்துவருபவரும், நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான பேராசிரியர் மருது கந்தப்பு 1984இல் முதலில் கண்டறிந்தார். இவரது கண்டுபிடிப்பானது, மூளை நரம்பியல் சிகிச்சைகளின் மூலம் மூளையின் பல்வேறு தொடர்புமையங்களைத் தாமே தூண்டித் தமது நோய்களைத் தாங்களே  குணப்படுத்திக்கொள்ளலாம் என்பதாகும். மனிதன் எவ்வாறு தனது புறப்பணிகளை மூளையின் உதவியுடன் செவ்வனே செய்துமுடிக்கிறானோ, அவ்வாறே அகப்பணிகளையும் ஆற்றமுடியும் என்ற அடிப்படையில், மனிதனின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் நோய்களைத் தமது சிந்தனைநுட்பத்தால் மூளையை நரம்புகளின் வழியாகத் தூண்டி நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவப் பதார்த்தங்களை இரத்த ஓட்டத்தினூடாக நோயுற்ற பகுதிக்கு அனுப்பி நோய்களைக் குணப்படுத்தலாம் என்கிறார். ஊNவு சிகிச்சைமுறையின் வாயிலாக நோய்களைக் குணமாக்க விளையும்போது, இரண்டாம் நபர் அல்லது வைத்தியர் ஒருவர் நோயாளியின் தாக்கப்பட்ட இடத்துக்கு மேலாகத் தமது கையை வைத்து மூளைக்கு வழிகாட்டினால், இலகுவில் மூளை அந்த இடத்தை அடைந்து நோயின் தார்ப்பரியத்தை அறிந்தபின் பொருத்தமான மையங்களுக்கு ஆணை பிறப்பித்து நோயைக் குணப்படுத்தத் தேவையான சகல மருந்துப் பொருட்களையும், தேவைப்படின் ஹோர்மோன்களையும் இரத்த ஓட்டத்தின் வாயிலாகத் தருவித்து நோயைப் பூரணமாகக் குணப்படுத்தும். இவ்வாறு முற்படுவதற்கு நோயாளி பாதிக்கப்பட்ட இடத்தை மனக்கண்ணால் பார்த்து (visualise) மூளையின் அபார சக்தியான மனோதிடத்தை (Will Power) பயன்படுத்தி நோயைக் குணமாக்கும் தொழிற்பாட்டை முன்னெடுக்கவேண்டும். இந்நூல் இவ்வழிமுறையை மூளை நரம்பியல் சிகிசசையின் கருப்பொருளும் அதன் வளர்ச்சியும், சக்தி-உயிர்-ஆன்மா-ஆன்மீக சக்தி, ஆன்மீக சக்தியை எவ்வாறு உற்பத்தி செய்வது, மூளை, உட்தொழிற்பாடு, வெளித்தொழிற்பாடு, உடற் சமநிலை, என இன்னோரன்ன 50 இயல்களில் நூலாசிரியர் விளக்குகின்றார்.

ஏனைய பதிவுகள்

12187 – இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடுகள்.

M.A.M.சுக்ரி. பேருவளை: நளீமிய்யா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகம், தபால்பெட்டி எண் 01, 1வது பதிப்பு, 1999. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). vii, 118 பக்கம், விலை: ரூபா 75.00,