எம்.கே.முருகானந்தன். கொழும்பு 6: மெடிக்விக் கிளினிக், 48/1 தர்மராம வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).
36 பக்கம், விளக்கப்படங்கள், அளவு: 18.5×12 சமீ.
வைத்திய கலாநிதி எம்.கே.முருகானந்தன், சிறு வயது முதல் எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டவர். இவரது முக்கிய ஈடுபாடு நலவியல் துறையாகும். இலங்கையின் அனைத்து முக்கிய தமிழ் பத்திரிகைகளிலும் இவரது நலவியல் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. மல்லிகை, ஞானம், சிரித்திரன், ஆதவன், நான்காவது பரிமாணம், போன்ற பல சஞ்சிகைகளில் சில சிறுகதைகளையும், பல விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளில் நீண்ட காலம் நலவியல் நிகழ்ச்சிகளை நடாத்தியதும் குறிப்பிடத்தக்கது. பதிவுகள் இணையத் தளத்தில் உங்கள் நலம் என்ற தொடரை எழுதியுள்ளார். தினக்குரல் தினசரியில் ‘ஹாய் நலமா’ என்ற உடல்நலவியல் சார்ந்த பத்தியையும் எழுதிவந்துள்ளார். இந்நூல் (VD), Sexually transmitted Diseases (STD), எயிட்ஸ் ஆகிய நோய்கள் பற்றித் தமிழ் வாசகருக்கு விரிவான தகவல்களைத் தருகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19417).