பூ.லக்ஷ்மன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பூ.லக்ஷ்மன், 267, நாவலர் வீதி, 1வது பதிப்பு, சித்திரை 2010. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டேர்ஸ், காங்கேசன்துறை வீதி).
(6), 106 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-52500-0-9.
முதுமை பற்றிய பல்வேறு மருத்துவ, சமூகவியல் அறிஞர்களால் எழுதிப் பிரசுரமான கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். முதுமை-வாழ்வின் படிநிலை: வயோதிபர்கள்- சமூகத்தின் சொத்து (சி.சிவதாஸ்), முதியோரின் கவனிப்பு முறைகள் மேம்படுமா? (சி.சிவன்சுதன்), தமிழர் சமூகத்தில் முதுமை- ஒரு தத்துவார்த்த நோக்கும் நடைமுறைப்படுத்தக்கூடிய சில முன்வைப்புகளும் (த.அருணகிரிநாதன்), முதுமைக்குத் தயாராதல் (கோகிலா மகேந்திரன்), முதியோர் வாழ்வில் சிவபூமி (ஆறு திருமுருகன்), இன்றைய சமுதாய நோக்கில் முதியவர்கள் (விகடகவி மு.திருநாவுக்கரசு), இறத்தல் (தயா சோமசுந்தரம்), முதுமையில் இதயம் (ம.குரபரன்), முதுமையில் மனச் சோர்வு (சா.சிவயோகன்), முதுமை மறதி (சிவராஜினி இராஜநாயகம்), வயோதிபரை வாட்டும் சில பொதுவான நோய்கள் (தி.குமணன்), வீடுகளில் படுக்கைப் புண் நோயாளிகளைப் பராமரித்தல் (சு.ரவிராஜ்), முதுமையும் சுவாச ஆரோக்கியமும் (கு.சுரேஷ்குமார்), முதுமையில் ஏற்படும் பொதுவான என்பு மூட்டு நோய்கள் (சி.சஞ்சீவ்), முதுமையும் ஒளடதமும்- சில குறிப்புகள் (தி.குமணன்) ஆகிய 16 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 58166).