சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், 199/1, கில்னர் ஒழுங்கை, 1வது பதிப்பு, மார்ச் 2012. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை).
x, 212 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 350., அளவு: 17×12.5 சமீ., ISBN: 978-955-53216-2-4.
பரராசசேகரம் கெர்ப்பரோக நிதானத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ள இந்நூல் அதிலுள்ள ஒழுங்குமுறையின்படி எழுதப்பட்டுள்ளது. மகளிர் நோய் வரலாற்றுப் பதிவேடு, சென்மவுற்பத்தி (கருவுற்பத்தி), கர்ப்பநாடி,கெர்ப்பரோக நிதானம், பெரும்பாடு, மலட்டுரோகம், கருச்சிதைவு, கெர்ப்பசூலம், காயாசுவாதம், கெர்ப்பரோக மகோதரம், அயானவாயு, குதிரைவலி, கருங்கிரந்தி, சூசிகாவாயு, வெள்ளை சாய்தல், கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய சில பொதுவான நோய்கள், பிரசவம், பிரசவத்தின் பின்னான பிரச்சினைகள், முலைப் புற்றுநோய், பெண்களின் உணவு ஆகிய 19 அத்தியாயத் தலைப்பகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராவார். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 175675).