கண்ணையா (இயற்பெயர்: மு.இராமையா). வவுனியா: மு.இராமையா, கலை நிலையம், கணேசபுரம், 1வது பதிப்பு, நவம்பர் 1996. (வவுனியா: ஆதவன்; கணனி அச்சகம்).
18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளரான கவியெழில் கவிஞர் கண்ணையாவின் மூலிகை தொடர்பான நூல். தந்தை செல்வா, இந்திரா காந்தி, நடிகர் எம்.ஜி.ஆர்., ஆகியோருக்கான நினைவஞ்சலிப் பாமாலைகள், கவிதைப் பூக்கள், இன ஐக்கியம் ஆகிய கவிதைத் தொகுப்புக்கள் என்பவற்றைத் தந்த கவிஞர் கண்ணையா எண்ணியல் கைரேகை சோதிடநூல் என்ற உரைநடை நூலையும் ஏற்கெனவே வழங்கியவர். தெய்வீக மூலிகைகள் சித்த வைத்தியமாக இருக்க, மேனாட்டு வைத்தியங்களை நாடுவது அறியாமையா? புரியாமையா? என்ற கேள்வியுடன் இந்நூலில் மூலிகைகளின் கைவைத்தியப் பயன்பாடுகளை பண்டைய படல்கள், வாகடங்களின் உதவியுடன் இச்சிறு நூலில் பதிவுசெய்திருக்கிறார்.