சே. சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், 199ஃ1, கில்னர் ஒழுங்கை, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, கே.கே.எஸ்.வீதி).
vi, 143 பக்கம், படங்கள், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.
108 மூலிகைகள் பற்றி எடுத்துக்கூறும் நூல். ஒவ்வொரு மூலிகையும் இனம்கண்டுகொள்ள ஏற்றவாறு தாவரவியற் பெயர், குடும்பப்பெயர், ஆங்கிலப்பெயர், பொதுவாகக் காணப்படும் இடம், மருத்துவப் பயன்பாடு என்பன போன்ற விபரங்கள் தரப்பட்டுள்ளன. மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சித்த மருந்துகள் பற்றியும் விபரம் காணமுடிகின்றது. மூலிகைகள்என்ற தலைப்பில் பிரதான விடயமும், இரண்டு பின்னிணைப்புகளில் முறையே மூலிகைகளின் தாவரவியற் பெயரும் குடும்பமும், மூலிகைகளின் சிங்கள ஆங்கிலப் பெயர்கள் என்பன தரப்பட்டுள்ளன. இறுதிப்பிரிவில் மூலிகைத்தோட்டம் பற்றிய தகவலும் காணப்படுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 137733).