தேவேந்திரநாத பண்டிதர். கொழும்பு 11: சரஸ்வதி புத்தகசாலை, 175,செட்டியார் தெரு, 1வது பதிப்பு, பிலவங்க வருடம் (1968). (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 161, செட்டியார் தெரு).
111, (9) பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 21.5×14 சமீ.
செழுமணவை சித்திரகவி தேவேந்திரநாத பண்டிதர் பல நூல்களையும் ஆராய்ந்து இந்நூலை இயற்றியுள்ளார். சித்தர்களால் இயற்றப்பட்டு, நிகண்டுகளிலும் வைத்திய வாகடங்களிலும் ஆங்காங்கே இடம்பெற்றிருந்த பதாகரங்களைத் திரட்டி இவ்வைத்திய விளக்க அகராதி உருவாக்கப்பட்டுளளது. ‘இந்நூலினுள் ஒளஷதிகளிற் பர்வதோற்பத்தி 32, பரங்கிவைப்பு 32 ஆகிய 64 பாஷாணங்களிலும், உபரசங்கள் 120-லும், தாவரவர்க்கங்களில் 64- மூலிகைகளிலும், கடைச்சரக்குகள் 64-லும் ஊர்வனப் பிறப்பு 40லும், உலோகங்களிலும் உள்ள ஒவ்வொரு மருந்துகட்குரிய பல நாமங்களையும், சத்துரு மித்துருக்களையும், புளிப்புப்புகளையும், நாதவிந்துகளையும் விளக்கி, இன்னும் பஞ்சபூத பௌதிக பாஷாணவுபரசவவணகுண பேதாபேதங்களையும், சரக்குகளிற் ஜனிக்கும் சத்துவாசத்துவ சமுதாய குணங்களையும், சாங்கோபாங்கமாய் ஏற்கெனவேயமைத்துள்ள திதினாலியாவரும் வெகுகளிப்படைவரென்பதுண்மை’–முகவுரையில் ஆசிரியர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 117707).