10370 விவசாய போதினி: பாகம் 1: ஆண்டு 9-12.

திருச்சி நவரத்தினம். கோப்பாய்: தி.பா.சந்திரா, 1வது பதிப்பு, 1996. (சுன்னாகம்: நீரஜா அச்சகம்).

(3), 56 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 50., அளவு:20.5×14 சமீ.

இந்நூலாசிரியர், விவசாய டிப்ளோமா பட்டம் பெற்றவர். சுன்னாகம், கோட்டைக்காடு அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை அதிபராகப் பணியாற்றியவர். முறைசாராக் கல்வித்திட்டத்தின் கீழ் விவசாய போதனாசிரியராகவும் பணியாற்றியவர். இந்நூலில் ஆண்டு 10-11க்குரிய புதிய பாடத்திட்டத்தின் (4ம் 5ம் அலகுகள்) இருபெரும் பாட அலகுகளைக் கொண்ட இருபிரிவுகள் உள்ளன. வித்துகள் மூலமும், பதியப் பகுதிகள் மூலமும் நாற்றுற்பத்தி செய்வது பற்றி முதற்பிரிவிலும், வித்துக்கள் மூலமும், பதிய முறை மூலமும்  தாவர இனப்பெருக்கம் பற்றி இரண்டாவது பிரிவிலும் விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 117837).     

ஏனைய பதிவுகள்

12385 – சிந்தனை: மலர் 1 இதழ் 1 (ஏப்ரல் 1967).

கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1967. (கண்டி: செய்தி அச்சகம், 241, கொழும்பு வீதி). 48 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 1.,