செல்லையா அருள்மொழி. மவுண்ட் லெவீனியா: திருமதி வானதி ராஜேந்திரா, 10/3, பார்ன்ஸ் அவென்யு, 2வது பதிப்பு, நவம்பர் 1996, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1993. (கொழும்பு 13: ஈசன் அச்சகம்).
vii, 183 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 140., அளவு: 21.5×14 சமீ.
இலங்கை விவசாயத்துறையின் வரலாற்றுப் பின்னணி, விவசாயச் சூழல் தொடர்பான ஆய்வு, விவசாயக் காலநிலை வலயங்களும் பயிர்ப்பாகுபாடும், தாவர இனப்பெருக்கம், நாற்று மேடைகளும் நாற்றுமேடை நுட்பமுறைகளும், நிலம் பண்படுத்தல், தாவர போசணை, பயிர்ச்செய்கையில் நீர்க்கட்டுப்பாடு, அறுவடை ஆகிய ஒன்பது இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் அக்கரைப்பற்று கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 119844).