P.F. ரதீந்திரகுமார், பு. ஸ்ரீராகவராஜன். யாழ்ப்பாணம்: நியூகலைவாணி புத்தக நிலையம், 1வது பதிப்பு, ஆனி 1994. (கண்டி: றோயல் பிரின்டர்ஸ், 190, கொழும்பு வீதி).
(2), 82 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 40., அளவு: 21.5×14 சமீ.
இந்நூலில் க.பொ.த. மாணவர்களுக்குரிய விவசாயவியல் பாடத்திட்டத்திற்கமைவாக எழுதப்பட்டுள்ள 12 இயல்களில் மண்ணரிமானம், நீர்வடிப்பு, காலநிலையியல், பண்படுத்தலுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், இலிங்கமுறை இனப்பெருக்கம், இரசாயன வளமாக்கிகள், போசனை மூலகங்கள் பயிர்களில் காட்டும் குறைபாட்டு அறிகுறிகள், இரசாயனமுறைக் களைகட்டல், பீடைகளின் இனப்பெருக்கம், நோய்கள், பயிர்ச்செய்கை முறைகள், சுற்றாடல் ஆகிய விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 110544).