10383 இத்தாலிய சமையல்.

தனு. முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், 1வது பதிப்பு, ஜனவரி 2016. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172, மில் வீதி).

xx, 68 பக்கம், விளக்கப் படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-42447-0-2.

ஈழத்துத் தமிழ்க் கவிதைத்துறையில் தடம்பதித்த இளம் கவிஞர் தனு இத்தாலியில் உணவகத்தில் (Italian Chef) ஆகப் பணியாற்றுகிறார். தனது இத்தாலிய முறையிலான உணவுப் படைப்புகளை அழகாக தட்டுகளில் ஒழுங்குபடுத்திப் பார்வைக்கு விருந்து படைத்திருப்பதுடன் இந்நூலில் அந்தவகை உணவுகளை செய்வதற்கான சமையல் பாகங்களையும் விபரித்திருக்கிறார். ஆங்காங்கே இத்தாலிய மொழியில் வழக்கிலுள்ள உணவுப் பதார்த்தங்களையும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். நூலில் அவர் இத்தாலிய மொழியில் குறிப்பிட்ட பதார்த்தங்கள், மரக்கறிகள், கடலணவு ஏன்பவற்றின் புகைப்படங்களையும் நூலின் இறுதியில் தொகுத்து வழங்கியுள்ளார். இத்தாலிய மொழியறிவு அற்றவர்களுக்கு இது ஒரு சுட்டியாகப்  பயன்படும்.

ஏனைய பதிவுகள்

15580 போகிற போக்கில்.

பூகொடையூர் அஸ்மா பேகம். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/663/675  பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (10), 11-104 பக்கம், விலை:

15889 வாழ்க்கையே ஓர் வரலாறு: அமரர் சதாசிவம் மாணிக்கவாசகர் நினைவுகள்.

மலர்க்குழு. கொழும்பு: அமரர் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்களின் நினைவுமலர்க் குழு, 1வது பதிப்பு, ஜ{ன் 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). v, 6-65, (8), பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.