இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர் கழகம். கொழும்பு 5: இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர் கழகம், இல.540, திம்பிரகஸ்யாய வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).
viii, 207 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ., ISBN: 978-955-1880-56-9.
AATSL (Association of Accounting Technician, Sri Lanka இறுதிநிலைப் பரீட்சைக்கான பாடநூல். 2010 ஆனி மாதத்திலிருந்து செயற்பாட்டிலுள்ள இலங்கை கணக்கிட்டுத் தொழில் நுட்பவியலாளர் கழகத்தின் திருத்திய பாடத்திட்டத்திற்கமைவாக தகவல் முகாமைத்துவமும் வியாபாரத்தில் அதன் பிரயோகமும் என்ற பாடத்திற்கு சுயகற்கை வழிமுறையாளர்களை வழிநடத்தும் குறிக்கோளுடன் இந்நூல் தயாரிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பம், தகவல் மற்றும் முகாமைத்துவ மட்டங்கள், தகவல் முறைமைகள், கணினிகள் மீளாய்வு, கணினி வன்பொருள், கணினி மென்பொருள், கணக்கீட்டு மென்பொருள், கணினி வலைப்பின்னல், தகவல் முறைமைகள் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள், தகவல் முறைமைகள் அபிவிருத்தி ஆகிய பத்து அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 160950).