எஸ்.மோசேஸ். கொழும்பு 5: கிருஷி வெளியீடு, A/3/3-2, அந்தரவத்தை வீடமைப்புத் திட்டம், கிருல்லப்பனை, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).
104 பக்கம், விலை: ரூபா 297., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-99794-2-5.
கலை என்றால் என்ன? (கலைப் படைப்பும் படைப்பாளியும், கலையும் நுகர்வோரும்), கலைகளின் வகைப்பாடுகள் (நாட்டுப்புறக் கலைகள், நுண்கலைகள், தொழில்நுட்பக் கலைகள்), கலைகளுக்கிடையிலான வேறுபாடுகள், கலையும் தொழில்நுட்பமும், இலத்திரனியல் தொழில்நுட்பம், தொழில்நுட்பக் கலைகள், செவிப்புல தொழில்நுட்பக் கலைகள் (செவிப்புல சாதனமாக வானொலி), கட்புலக் கலைகள், கட்புல ஊடகம், கட்புல தொழில்நுட்பக் கலைகள், திரைப்படக்கலை (முதனிலைத் தயாரிப்பு, திரைக்கதை எழுதுதல், தயாரிப்புச் செயல்திட்டம், படப்பிடிப்பிற்குப் பின், விநியோகமும் விளம்பரமும்), தொலைக்காட்சிக் கலை (படப்பிடிப்பு, திட்டமிடலும் தயாரிப்பும், படப்பிடிப்பு நுட்பங்கள், இறுதி நிலை), ஒளிப்படக்கலை (ஒளிப்படமெடுத்தல், ஒளிப்படம் எடுப்பவர்கள், ஒளிப்படப் பெட்டிகள், ஒளிப்படப் பெட்டியைக் கையாளும் முறைகள்), கணினிக்கலை (கணினி வரைவு மற்றும் உயிர்ப்பசைவியக்கம், கணினியில் உயிர்ப்பசைவியக்கம், கணினி உயிர்ப்பசைவியக்கம் மற்றும் வரைவு வரலாறு, கணினி வரைவு மற்றும் உயிர்ப்பசைவியக்கத்தின் முக்கிய பயன்கள், கணினி வரைவு மற்றும் உயிர்ப்பசைவியக்கம் வரைதலின் பல்வேறு படிகள் மற்றும் முறைகள்)ஆகிய 14 பிரதான இயல்களிலும் அவற்றின் உப தலைப்புகளின் கீழும் இந்நூல் விரிவான விளக்கமளிக்கின்றது.