ஏ.எஸ்.சற்குணராஜா. பருத்தித்துறை: எஸ். பதிப்பகம், வியாபாரி மூலை, 1வது பதிப்பு, செபடெம்பர் 2007. (கொழும்பு 6: ரண்யா கிறாப்பிக்ஸ், வெள்ளவத்தை).
vi, 114 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 175., அளவு: 20.5×14.5 சமீ.
சிந்துவெளிக் கலைகள், இந்தியப் பௌத்தக் கலைகள் (மௌரியர் கலைகள், சாஞ்சி தூபி, பாரூத் தூபி, அமராவதி தூபி, காந்தாரக் கலை, மதுரா கலைமரபு, குப்தர் கலை மரபு), இந்தியக் குகை ஓவியங்கள் (அஜந்தா, எல்லோரா), மகாபலிபுரம் சிற்பங்கள், மகிஷாசுரமர்த்தனி மண்டபம், கங்கையின் இறக்கம், பஞ்சபாண்டவர் தேர்கள்), கஜுராஹோ சிற்பங்கள், மொஹாலயக் கலை, இராஜபுத்தான ஓவியங்கள், சோழர்காலக் கலை ஆகிய தலைப்புகளில் விரிவாக இந்நூலில் இந்தியக் கலைகள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை, வியாபாரி மூலையைப் பிறப்பிடமாகக்கொண்ட நூலாசிரியர் மேல் மாகாணத்தின் களுத்துறைக் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றுகிறார். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 141113).
இந்தியக் கலை: க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கான சித்திரக்கலை.
ஏ.எஸ்.சற்குணராஜா. பருத்தித்துறை: எஸ். பதிப்பகம், வியாபாரி மூலை, 2வது பதிப்பு, நவம்பர் 2018, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ், 41, Brass Founder Street).
vi, (8), 147 பக்கம், ஒளிப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-705-257-1.
இந்திய ஓவியர்கள் (ராஜா ரவிவர்மா), சிந்துவெளிக் கலைகள், மௌரியர் கலைகள், அசோகன் காலத்துத் தூண்கள், சாஞ்சி தூபி, சாஞ்சி தோரணம், பாரூத் தூபி, இந்திய ஓவியர்கள் (அபனீந்திரநாத் தாகூர், நந்தலால் போஸ்), காந்தாரக் கலை, மதுரா கலைமரபு, அமராவதி தூபி, குப்தர் கலைமரபு, இந்தியக் குகை ஓவியங்கள் (அஜந்தா, எல்லோரா), மகாபலிபுரம் சிற்பங்கள், பஞ்சபாண்டவர் தேர்கள், கங்கையின் இறக்கம், கடற்கரைக் கோவில், இந்திய ஓவியர்கள் 9ஜாமினி ரொய், அம்ரிதா ஷேஹில்), சோழர்காலக் கலை, மொஹலாயக் கலை, இராஜபுத்தான ஓவியங்கள்அகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் சப்பிரமணியம் சற்குணராஜா, வடமராட்சி வியாபாரி மூலையைபிறப்பிமாகக் கொண்டவர், மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்திலும் ஹாட்லிக் கல்லூரியிலும் கல்வி கற்றவர். ஹாட்லி கல்லூரியில் முதல் நியமனத்தைப் பெற்று சித்திர ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கியவர். தற்பொது வட மாகாணக் கல்வித் திணைக்களத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றுகின்றார்.