காவலூர் இ.விஜேந்திரன். யாழ்ப்பாணம்;: வின்லான்ட் புத்தகசாலை, இல.61, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2015. (யாழ்ப்பாணம்: சத்தியா பிரின்டர்ஸ்).
viii, 52 பக்கம், அட்டவணைகள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 320., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-41999-1-0.
பாட உள்ளடக்கம், தவணை ரீதியான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் விடைகளுடன் ஆகிய மூன்று குறிப்பிடத்தக்க அம்சங்களை உள்ளடக்கியதாக இவ்வோவிய உப பாடநூல் வெளிவந்துள்ளது. தரம் ஏழுக்குரிய பாடப்பரப்புகளான இலங்கையின் முக்கிய சில தாதுகோபங்கள், இலங்கையின் புராதன குகை ஓவியங்கள், ஐரோப்பிய புராதன குகை ஓவியங்கள் ஆகிய மூன்று அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. தரம் எட்டுக்குரிய பாடப்பரப்புகளான சமய-அரச கலைப் படைப்புக்கள், இந்து சமயச் சிலைகள், இலங்கையின் பாரம்பரிய நாட்டார் கலைகள், அலங்கார வடிவங்கள், என்பன தனித்தனி இயல்களாக விளக்கப்பட்டுள்ளன. துறைரீதியான கற்றல்-கற்பித்தல் அனுபவம், சித்திரப்பாட நூல்களை தரம் 6 முதல் 13 வரை எழுதி தொடர்ச்சியாக வெளியிட்டுவந்த அனுபவம் ஆகியவை ஆசிரியரின் இந்நூல் தயாரிப்புக்கு உறுதுணையாக இருந்துள்ளன. (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10094).