பயஸ்ராஜா. யாழ்ப்பாணம்: நிமலராஜன் ஞாபகார்த்த அமைப்பு, 1வது பதிப்பு, மே 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).
vi, 122 பக்கம், கருத்தோவியங்கள், விலை: ரூபா 500., அளவு: 18×26.5 சமீ.
சர்வதேச ஊடக சுதந்திர தினமான 03.05.2012 அன்றுவெளியிடப்பட்ட கருத்தோவியத் தொகுப்பு. ‘நமது ஈழநாடு’ பத்திரிகையின் ஆஸ்தான ஓவியராகத் திகழ்ந்தவர் ஓவியர் பயஸ்ராஜா. வன்னிப் பேரவலத்தின் கடைசிக் கணம் வரை தப்பித்த போதும், சித்திரவதைகளால் பலவீனப்பட்டுப் போன பயஸின் உடல்நிலை கடைசிக் கணங்களில் ஈடுகொடுக்கமுடியாது அகால மரணத்தைத் தழுவிக்கொண்டார். தன் சுய திறமையோடு ஓவியத்தைப் பயின்று அதன் நுட்பங்களை பரிசோதித்து ஆழ்ந்த அரசியல் பின்புல அறிவோடு அவர் படைத்த கேலிச்சித்திரங்கள் (கருத்தோவியங்கள்) தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் விருப்பத்துடன் இரசிக்கப்பட்டவை. அவையே அவரது மறைவுக்கும் காலாகியது. வரலாற்றுப் பெறுமதிமிக்க அக் கருத்தோவியங்களின் தேர்ந்த தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54915).