10400 காலந்தோறும் நாட்டியக் கலை.

கார்த்திகா கணேசர். கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, இல.202, செட்டியார் தெரு, 3வது பதிப்பு, 2013, 1வது பதிப்பு, 1979, 2வது பதிப்பு, 1980. (கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம்).

xx, 176 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 450., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-9396-60-4.

நாட்டியக் கலாநிதிப் பட்டத்தை இலங்கை அரசிடமிருந்து 1982இல் பெற்றுக்கொண்ட நாட்டிய விற்பன்னர் கார்த்திகா கணேசரின் இந்நூலில் ஆடற் கலையின் தோற்றம், ஆடற் கலையின் பரிணாம வளர்ச்சி, அழகூட்டும் ஆடல் யுக்திகள்,  (அடவுகள்-கரணங்கள்), அறிவுக்கு விருந்தாகும்அபிநயம் (நடனம்+அபிநயம்=நாட்டியம்), சுவையூட்டும் நடிப்புக்கு (சாத்வீக அபிநயம், ஸ்தாயிபாவம்), பரத நாட்டியம் (காலத்தை வென்ற தனியாடல் முறை), எமது நாட்டிய வடிவங்கள் (கூச்சுப்புடி தந்த பரதம்), எமது நாட்டிய மரபு (அறிவூட்டும் ஐந்தாம் வேதம்), ஈழத்தில் நாட்டியம் (எமது பிரச்சினைகள்), ஈழத்தின் நாட்டியக்கலை (அண்மைக்காலத்து ஆக்கங்கள்), நாட்டிய நாடகத்தின் தாக்கங்கள் (ஈழத்து அனுபவங்கள்), நாட்டியக்கலை விருத்திக்கு (தத்துவமும் கோட்பாடும்), நாட்டியக்கலை விருத்திக்கு (பார்வையாளரும் விமர்சகர்களும்) ஆகிய 13 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நாட்டியசிரோண்மணி வீரமணிஐயரின் மாணவியான கார்த்திகா, வழுவூர் இராமையாபிள்ளையிடம் குருகுலவாச நடனப் பயிற்சியை தமிழகத்தில் மேற்கொண்டவர். கார்த்திகா நடனக்கல்லூரி என்ற பெயரில் கொழும்பு, சென்னை, சிட்னி ஆகிய நகரங்களில் தனது நடனக் கலையகங்களை நிறுவி இயக்கிவருகின்றார். இந்நூலுக்கு 1982ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் முதற் பரிசை தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் நூலாசிரியரக்கு வழங்கியிருந்தார்.

ஏனைய பதிவுகள்