10401 தமிழர் வளர்த்த ஆடற்கலைகள்.

கார்த்திகா கணேசர். கொழும்பு 6: ஞானம் வெளியீடு, ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2014, 1வது பதிப்பு, 1969. (மஹரகம: தரஞ்சி பிரின்ட்ஸ், நாவின்ன).

xvi, 122 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-8354-51-3.

நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக நாட்டிய அனுபவம் வாய்ந்தவர். நாட்டியக்கலையைச் சாஸ்திரீய முறைப்படி பயின்ற இவரது முதற்குரு யாழ்ப்பாணம் இணுவில் வீரமணி ஐயராவார். பின்னர் தமிழ்நாடு, வழுவூர் இராமையாபிள்ளையின் சென்னை வீட்டிலேயே தங்கி குருகுலவாசம் செய்து முறைப்படி நடனத்தைப் பயின்றவர். என். ராஜகோபாலனின் Biographical Dictionary of Musicians and Dancers of India என்ற என்ற வாழ்வியல்அகராதியின் ஐந்தாம் பாகத்தில் உயர்தர நாட்டியத் தாரகைகள் எனக்குறிப்பிட்ட முதல் 21பேரில் இவரும் அடக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு விருது, தஞ்சைப் பல்கலைக்கழக விருது என்பவற்றுடன் இலங்கை இந்து கலாச்சார அமைச்சின் நாட்டியக் கலாநிதி விருதையும் பெற்றவர். தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவருகின்றார். கவின் கலைகளின் தோற்றம், மூவேந்தர் காலம், வடமொழி முதல்நூல், பரதர் யார், அபிநய தர்ப்பணம், சிலப்பதிகாரம், சிலப்பதிகாரம் கூறும் நாட்டிய இலக்கணங்கள், சிற்ப சான்றுகள், இந்தியச் சிற்பங்கள், தமிழ்நாட்டில் சிற்பங்களின் நிலை, சிவநடன தத்துவம், சோழர்காலமும் ஆடற்கலையும், ஈழத்தில் பரதத்தின் தனி அம்சங்கள், அகழாராய்ச்சி தரும் சான்றுகள், பரதம் வளர்த்த பாவையர், பரதத்தின் அமைப்பு, அடவுகள், அபிநயம், முத்திரைகள், ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம், தில்லானா, இருபெரும் பாணிகள், நட்டுவனாரின் பங்கு, மதராஸ் பாணி, பதங்களில் புதுமை, மாற்றங்களுக்கான காரணிகள், சினிமாக் கலையின் ஆதிக்கம், நாட்டிய நாடகங்கள், வடநாடு காட்டிய பாதை, பழமையில் தூங்கும் தென்னாடு, ஆடற்கலையில் தென்னகத் தாக்கம், இருவகை ஈழத்துக் கூத்துக்கள், சோழப் பேரரசும் ஈழத்தில் பரதமும், 20ம் நூற்றாண்டில் ஆடற்கலையின் நிலை, கடந்த 15 ஆண்டுகளில் வளர்ச்சி, பரதக்கலையும் இன்றைய நிலையும், நட்டுவாங்கத்தின் இன்றைய நிலை, அந்தஸ்தின் சின்னமாகியுள்ள பரதம், பரதக்கலையின் எதிர்காலம், கலை வளர்ச்சிக்குரிய விமர்சன உதவி ஆகிய விடயத் தலைப்புகளின் கீழ் தலைப்பிடப்படாத ஒன்பது அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Slot Machine Online Banana Splash

Content Cele mai bune gamomat sloturi online pentru jocuri | Jocul Să Ameninţare Nu O E Găsit Niciun Cazino Unde Pot Să Găsesc Novomatic Cazinouri