எஸ்.மகேந்திரன். யாழ்ப்பாணம்: இசைத்துறை, இராமநாதன் நுண்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (வவுனியா: பொய்கை பதிப்பகம்).
xxxiv, 126 பக்கம், விளக்கப்படங்கள், 12 தகடுகள், விலை: ரூபா 400., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-41813-2-8.
லயஞானவாரிதி டாக்டர் சி.மகேந்திரன் அவர்கள் இராமநாதன் நுண்கலைக் கழகத்தின் மிருதங்க விரிவுரையாளராவார். இந்நூல் கலை ஓர் அறிமுகம், இசைக் கலை, பரத நாட்டியத் தோற்றம், வளர்ச்சி, பரத நாட்டிய மரபில் இசையும் அதன் முக்கியத்துவமும் ஆகிய நான்கு இயல்களில் எழுதப்பட்டுள்ளது. பரத நாட்டியத் தோற்றம் பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும் கூறும் வேளை, பரதம் பற்றிய பொது நோக்கு, இசை-பரதம் இவற்றின் பரஸ்பரத் தொடர்பும் பிரதான அமிசங்களும், கர்நாடக (தமிழ்) இசையும் பரத நாட்டியமும், நாட்டிய சாஸ்திரத்துக்கு முற்பட்ட வரலாறு, ஓவியங்களும் சிலைகளும் வேத இலக்கியங்களும் சுட்டும் சான்றுகள், நாட்டிய சாஸ்திரம் கூறும் பொருளடக்கம், தமிழகத்து நடனமும் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளும், பாறை ஓவியங்களும் தமிழ்மொழி நாட்டிய நூல்களும், சங்ககால தமிழக நடனங்களும் அவை சுட்டும் நூல்களும், பழந்தமிழ் நாடக இலக்கண நூல்கள், பழந்தமிழ் தாள இலக்கண நூல்கள், சங்கத் தொகை நூல்கள், நிகண்டு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை சுட்டும் அக்காலத்தைய நடனம், நாட்டிய சாஸ்திரமும் சிலப்பதிகாரமும் ஓர் ஒப்புநோக்கு, மணிமேகலை சுட்டும் நடனம், பல்லவர் பாண்டியர்கால நடனம், சோழப்பெருமன்னர் கால நடனம், பிற்காலப் பாண்டியப் பெருமன்னர், விஜயநகரப் பெருமன்னர், நாயக்கர், மராத்தியர் காலத்து நடனம், தஞ்சை நால்வரின் கலைப்பணிகள், நாட்டியத்துக்கேற்பட்ட நலிவு, பரதக் கலையின் மறுமலர்ச்சி, சமயப் பின்னணியில் நாட்டியத் தோற்றம், வளர்ச்சி, நாட்டிய சாஸ்திரம் சுட்டும் நடனத் தோற்றம், கோவில்களும் நடனக் கலையும், கோவில்களில் தேவதாசியரின் நாளாந்தப் பணி, தாண்டவ தீபார்த்தனை ஆடல், சமயஞ்சார் நடன வடிவங்கள், சமயமும் நாட்டார் வடிவமும் ஆகிய விடயங்களையும் உள்ளீர்த்து விளக்கியிருக்கிறார். மேலும் பரத நாட்டிய மரபில் இசையும் அதன் மக்கியத்துவமும் பற்றி விபரிக்கும் வேளை, நாட்டிய உருப்படிகளும் இசைவடிவமும், நாட்டியத்தில் கருவி இசையின் முக்கியத்துவம், பரதநாட்டிய அரங்கிசைக் கிரமம், ஆகிய விடயங்களை விளக்கியிருக்கிறார். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1001426).