மலர்க்குழு. கொழும்பு: தினகரன், அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலொன் லிமிட்டெட், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1969. (கொழும்பு: லேக் ஹவுஸ், டி.ஆர்.விஜயவர்த்தனா மாவத்தை).
96 பக்கம், புகைப்படங்கள், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×19.5 சமீ.
இலங்கைத் தமிழ் நாடகத்துறை வரலாற்றில் தினகரன் நாடக விழாக்கள் 1960-70 காலப்பகுதிகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. அத்தகைய நாடக விழாவொன்றின் போது 30.10.1969 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். தமிழ் நாடகமும் அதன் வளர்ச்சியும் (டி.கே.பகவதி), சங்க இலக்கியங்களில் காணும் நாடகப்பண்பு (அ.நடேச முதலியார்), நாடக உலகு (ஆ.வி.மயில்வாகனம்), கவிதை நாடகங்கள் (க.கைலாசபதி), நாடகத் தமிழும் நமது துறையும் (எஸ்.தில்லைநாதன்), நவீன நாடக அரங்கு வேண்டும் (சோ.நடராஜா), நடிப்பில் முதல் ஆறு பாடல்கள் (இ.இரத்தினம்), புண்ணியம் கிடைக்கட்டும் (முருகையன்), மயானகாண்டம் வெற்றியளித்ததேன், கள்வனோ கணவன் (செ.தனபாலசிங்கன்), நாடக உத்திகள் (சுஹைர் ஹமீட்), நாடகத் துறையில் மகளிர் (ஞானம் இரத்தினம்), பிறமொழி நாடகங்களைத் தயாரித்தல் (தேவன்-யாழ்ப்பாணம்), நமது சமூக நாடகங்களில் மொழிநடை (இ.சிவானந்தர்), இலக்கிய நாடகங்களைத் தயாரித்தல் (சொக்கன்), பழைய கூத்துக்களைப் பழக்குதல் (சி.மௌனகுரு), கொழும்பில் தமிழ் நாடகங்களின் நிலை (வரணியூரான்), மாதோட்ட நாடக வரலாறு (நானாட்டான் ம.பெஞ்சமின் செல்வம்), நாடகமும் சினிமாவும் (ஏ.ரகுநாதன்), நாடகச் சிலம்பு (க.நவசோதி), கலை உலகத்திற்குத் தினகரன் சேவை (எஸ்.பாலச்சந்திரன்) ஆகிய கட்டுரைகளும், ஆசியுரை, வாழ்த்துரைகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35894).