10405 முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம்.

கே.எஸ்.சிவகுமாரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2014. (சென்னை 24: ஆதிலட்சுமி பிரிண்டர்ஸ்).

iv, 136 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21×14 சமீ.

திரைப்படத்துறை தொடர்பாக, திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரனின் 36 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. நாம் ஏன் திரைப்படம் பார்க்கிறோம்? மாறிவரும் திரைப்பட விமர்சன அணுகுமுறை, திரைப்படக்கலை பற்றித் தமிழில் ஓர் அருமையான நூல், திரைப்படத் திறனாய்வுக்குத் தமிழில் ஓர் ஏடு, ரொஜர் மன்வல், திரைப்பட விமர்சனம், டொக்கியுமென்டரி என்றால் என்ன?, பிரசாரம் இல்லாத தூயகலை இருக்கமுடியாது, திரைப்பட விமர்சனப் பயிற்சி, திரையில் பெண்கள் சிலரின் தனி ஆளுமை, அவதானிக்கவேண்டிய அற்புத நடிகை, மூன்று தமிழணங்குகளின் செலுலொயிட் பங்களிப்பு, டில்லித் திரைப்படவிழாக் காட்சிகள், பி.நரசிங்கராவின் ‘தாஸி’, இரானிய படம் ‘சரா’, இஸ்லாமிய பண்பாடுகளை நளினத்துவத்துடன் சித்திரிக்கும் ஈரானியத் திரைப்படங்கள், இந்தியப் பெண்களின் திரைப்பட நெறியாள்கை, அடுர் கோபாலகிருஷ்ணனின் ‘கதாபுருஷன்’, தபன் ஸின் ஹாவும் அவரது ஆக்கமும் நெறியாழ்கையும், இந்தியாவின் 26ஆவது சர்வதேச திரைப்பட விழா, டில்லி திரைப்பட விழா 1996, மறக்க முடியாத சில மாநிலத் திரைப்படங்கள், டெல்லி திரைப்பட விழா, மணவாழ்வு பற்றிக் கூறும் ‘யுவதிபதி’, A Man for all seasons, லியோன், இங்மார் பேர்கனும் அவரது திரைப்படங்களும், ஒல்லாந்து திரைப்பட விழா, ‘சரோஜா’ திரைப்படம்: சிங்களச் சிறுமியின் மனித நேயம், இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள், மலையாள சினிமா: மரண சிம்மாசனம், சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விவரணப்படங்கள், திருவனந்தபுர திரைப்பட விழா: செம்மையான வணிகப் படங்களும் கலைத்தரமான படங்களும், சில தகவல்கள், சிவகுமார் என்றொரு கலைஞன், அருந்ததியின் முகம்: உள்நாட்டில் காலூன்றி உலக மனிதர்களாய் ஆகிய 36 தலைப்புகளில் அமைந்துள்ள இக்கட்டுரைகள் உலக சினிமா பற்றிய  விரிவான பார்வையை வழங்குகின்றது.       

ஏனைய பதிவுகள்

On line Sports betting Us

Content Website link | Enthusiasts Sportsbook Promo: Gather 1k Within the Bonuses To have United kingdom Unlock, Mlb Video game Invited Bonuses Or any other