ஞானம் பாலச்சந்திரன். கொழும்பு 6: ஞானம் வெளியீடு, ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (மஹரகம: தரஞ்ஜீ பிரின்டர்ஸ், 506 ஹைலெவல் வீதி, நாவின்ன).
(10), 53 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-8354-57-5.
முச்சங்க காலத்திலிருந்து தமிழர் தோற்றுவித்த சங்கங்கள் பற்றிய ஒரு சுருக்கமான பார்வையை ஆசிரியர் இந்நூலில் செலுத்தியுள்ளார். இம்மூன்று சங்கங்களின் பின்னர் நான்காவதாக அமைந்த யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் பற்றிய ஆய்வே இந்நூலின் நோக்காகவுள்ளது. யாழ்ப்பாண மன்னர்கள் 13ஆம் நூற்றாண்டில் நிறுவிய தமிழ்ச் சங்கம் பற்றிக் கிடைக்கும் பெருந்தொகையான தகவல்களை ஆசிரியர் இந்நூலிலே தருகிறார். முச்சங்கங்கள் மறைந்த பின்னர் யாழ்ப்பாண மன்னர்கள் தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவி, பல நூல்களைச் செய்வித்து சரஸ்வதி மஹாலயம் என்னும் நூலகத்தில் ஆவணப் படுத்தியுள்ளார்கள் என்பதை இந்நூல் ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்கின்றது. ஞானம் பதிப்பகத்தினரின் ‘ஈழமும் தமிழும்’ என்ற தொடரில் முதலாவதாக வெளியிடப்பட்டுள்ள ஆவணநூல் இதுவாகும். 34ஆவது ஞானம் வெளியீடாக வெளிவந்துள்ளது.