கவிஞர் துரையர் (இயற்பெயர்: சு.துரைசிங்கம்). சுன்னாகம்: பாமா பதிப்பகம், 118, ஸ்டேசன் ஒழுங்கை, சுன்னாகம் கிழக்கு, 1வது பதிப்பு, ஆவணி 2008. (சுன்னாகம்: கிருஷ்ணா பிறின்டேர்ஸ், டாக்டர் சுப்பிரமணியம் வீதி).
(5), 60 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 190., அளவு: 27.5×20 சமீ.
கவிஞர் சு.துரைசிங்கம் எழுதிய 30 சிறுவர் பாடல்கள் படங்களுடன் கூடியதாக இந்நூலில் வெளிவந்துள்ளன. இக்கவிதைகளில் சொல்லல், எளிமைபடச் சொல்லல், விளக்கிச் சொல்லல், வேண்டியவிடத்துப் பேச்சு மொழியைப் பயன்படுத்தல், எளிய சந்தங்களை எடுத்தாளல் முதலிய பண்புகள் விரவியுள்ளன. பலவிடங்களில் சிறாருடைய புலக்காட்சியூடாகப் பார்க்கும் எத்தனிப்பு காணப்படுகின்றது. பண்பளவு உற்று நோக்கல், எண்ணளவு உற்றுநோக்கல், சார்பு நிலை நோக்கல், அகன்ற நோக்கல், நுண்ணிய நோக்கல், முதலாம் முன்னெடுப்புகள் என்பன இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45570).