வயலற் சந்திரசேகரம். சிலாபம்: திருமதி சந்திரசேகரம், 11/30, 1ம் ஒழுங்கை, அளுத்வத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 2000. (சிலாபம்: சுதசுன அச்சகம்).
31 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×22 சமீ., ISBN: 955-96980-0-1.
ஆசிரியப் பணியில் 15 ஆண்டுகளைக் கழித்த நிலையில் சிலாபம் புனித பேர்ணடேற் கல்லூரியில் உப அதிபராகப் பணியாற்றும் வயலற் சந்திரசேகரம், சிறார்களுக்கேற்ற எளிய முறையில் கவி வடிவில் கவின்கவி, அதாவது அழகுக்கவி என ஒரு சிறுவர் பாடல் முன்வைத்திருக்கின்றார். நல்வழியை உணர்த்தும் நோக்குடன் புனையப்பெற்ற பாடல்கள் 24 பொருள்கள் பற்றியவை. இறைவனடி தொழுவோம், நல்வழிகளை அறிவோம், நீ பிறந்தது ஏன், தவிர்க்க வேண்டியது, இலங்கை நம் நாடு, கற்பது ஏன், நல்லதை நீ நாடு, தற்பெருமை பேசாதே, இறந்த பின்பும் வாழ்வது, முதியோரை மதிப்போம், உணர்ந்துவிடு, அறிய வேண்டிய அறிவு, சிந்தி, உன் உள் தேடு, தந்திரி யார்?, உலகினை நாம் உணர்வோம், ஒற்றுமை ஓங்க வேண்டும், வாழ்வின் சிறப்பு, எமக்கு வேண்டியது என்ன?, தலைவன் யார்?, கற்பது எதற்காக?, இயற்கையிற் தேடிக் கற்போம், நமது நாட்டுத் தலைவர்கள், அன்பு ஆகிய 24 தலைப்புகளில் இப்பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இப்பாடல்களில் சில உரைநடைச் சாயலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29168).