இரத்தினம் அப்புத்துரை. கொழும்பு 13: கதிர்காமு ஜெயராஜா நினைவு வெளியீடு, 100, விவேகானந்த மேடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2006. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்).
x, 50 பக்கம், வண்ண ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×20.5 சமீ.
யாழ். அராலி கதிர்காமு ஜெயராஜா அவர்களின் நினைவாக வெளியிடப்பட்டுள்ள இந்நூலிலுள்ள குழந்தைப் பாடல்களை குழந்தைக் கவிஞர் சைவப்புலவர் திருமதி இரத்தினம் அப்புத்துரை எழுதியிருக்கிறார். மயிலங்கூடலூர் பி.நடராஜன் அவர்களின் வெளியீட்டுரையுடன் வெளிவந்துள்ள இந்நூலில், ஆனைமுகன், அம்மா அன்புத் தெய்வம், அன்புத் தெய்வம் அப்பா, அம்மா எங்கள் தெய்வம், அறிவை வளர்ப்பவர் அப்பா, நாவலரை நாம் போற்றிடுவோம், பாரதியார், தங்கத் தாத்தா, பாடு தம்பி பாடு என இன்னோரன்ன 50 குழந்தைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. திருமதி இரத்தினம் அப்புத்துரை 2003இல் மழலைத் தமிழ்ப்பாடல் என்ற தலைப்பில் தனது முதலாவது நூலை வெளியிட்டவர். 2004இலும் தருமர் பா அமுதம் என்ற தலைப்பில் இவரது பாடல்கள் ஒரு நினைவு மலர்த் தொகுப்பாக வெளிவந்தது.