10416 சிறுவர் பாடல்கள்: செவிமடுப்போம்-பாடி ஆடி மகிழ்வோம்.

தேசிய கல்வி நிறுவகம். கொழும்பு: ஆரம்பக் கல்வி, விசேட கல்விப் பிரிவு, பாடவிதான அபிவிருத்தி நிலையம்-1, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

iv, 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

ஆரம்பக் கல்விப் புதிய சீர்திருத்தங்களுக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட பாட நூல். புதிய கல்விச் சீர்திருத்தத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ள சுற்றாடல்சார் செயற்பாடுகள் எனும் ஒன்றிணைந்த பாடப்பரப்பினூடாக முன்வைக்கப்பட்டுள்ள பாடல்களைப் பிள்ளைகள் செவிமடுத்து, பாடி ஆடி மகிழ்வதன் மூலம் தமது அழகியல் திறன்களை விருத்திசெய்துகொள்ள வேண்டுமென கல்வித்துறையினரால் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்பொருட்டு சுற்றாடல்சார் செயற்பாடு எனும் பாடப்பரப்பில் தரப்பட்டுள்ள கருப்பொருள்களுக்குப் பொருத்தமாக ஆசிரியர் கைந்நூல்களில் பல பாடல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அப்பாடல்களையும் மேலும் பொருத்தமானதெனக் கருதப்பட்ட சில பாடல்களையும் இச்சிறு நூலிலும் ஒலிப்பதிவு நாடாவிலும் பதிப்பித்து இரண்டையும் ஒருங்கிணைத்து வெளியிட்டுள்ளனர். ஆரம்பக் கல்விப்புலத்தின் ஒவ்வொரு முதன்மை நிலையிலும் பயிலும் மாணவர்களுக்கு ஏற்புடையதாக பாடல்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44312).

ஏனைய பதிவுகள்