கே.எம்.எம்.இக்பால். கிண்ணியா 07: பாத்திமா ருஸ்தா பதிப்பகம், 46/6, பெரியாற்று முனை, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F-L, 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
vii, 36 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 175.00, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955- 0635-33-7.
உயிர்ப்பலி கொள்ளும் இன்றைய இயற்கை அநர்த்தங்களுக்கு சூழலை நாம் உரியவகையில் பாதுகாக்கத் தவறியமையே காரணம் என்ற வகையில் சூழல் பாதுகாப்பு பற்றிய அறிவினை சிறுவர்களுக்கு வழங்க 36 பாடல்களைக் கொண்டுள்ள இந்நூலை ஆக்கியுள்ளார். சிறுவர்களின் இரசனை, கற்பனை வளம், கவிதையாக்கம், மொழிவளம், சொல்வளம் என்பவற்றோடு அவர்களின் பல்வேறு ஆற்றல்களையும் விருத்தியடையச் செய்யும் நோக்கில் சூழல்நேயப் பாடல்களைக்கொண்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. மரம் வளர்த்தல், காடுகளைப் பாதுகாத்தல், பறவை விலங்குகளைப் பாதுகாத்தல், ஈரநிலம், குப்பையை அகற்றிடுவோம் எனப் பல்வேறு விடயங்களை இதிலுள்ள 36 பாடல்களும் பேசுகின்றன. நூலாசிரியர் மூதூரைப் பிறப்பிடமாகவும் கிண்ணியாவை வாழிடமாகவும் கொண்டவர். 42க்கும் அதிகமான நூல்களின் ஆசிரியர். சிறுவர் இலக்கியத்தில் ஆர்வத்துடன் ஈடுபடும் விரல்விட்டெண்ணக்கூடிய படைப்பாளிகளுள் இவரும் ஒருவர்.