கஜறதி பாண்டித்துரை. வவுனியா: தமிழ் மன்றம், வவுனியா/அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயம், 1வது பதிப்பு, ஜனவரி 2009. (வவுனியா: ஒன்லைன் அச்சகம்).
40 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 110., அளவு: 20×14.5 சமீ.
பூனைகளையும் எலிகளையும் பாத்திரங்களாகக் கொண்டு சிறுவர்களுக்கு மகிழ்ச்சியுடன் நற்பண்புகளையும் ஊட்டும் வகையில் தயாரிக்கப்பட்ட நாடகத்தின் எழுத்துரு இதுவாகும். குழு மனப்பான்மை, ஒற்றுமை, துணிச்சல், புத்திசாலித்தனம், ஆற்றல், புதிய உத்திகளுடனான செயற்பாடு, முதலான பண்புகளின் மூலம் தமது எதிரிகளைத் தாமே தந்திரத்தால் பணியவைத்து நண்பர்களாக்கிக் கொள்கின்ற கருப்பொருளைக் கொண்டது. பாடசாலைமட்டச் சிறுவர் அரங்கச் செயற்பாடுகளின் தேவைக்காக அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 ஆரம்பப் பிரிவு மாணவர்களின் உதவியுடன் இந்நாடகம்; அரங்கேற்றம் கண்டது. பின்தங்கிய கிராமமொன்றின் நலன்பரி நிலையச் சூழலில் வாழும் இச்சிறார்களால் மேடையேற்றப்பட்ட இந்நாடகம் பல முன்னணிப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு தேர்வுபெற்றதென்பதை குறிப்பிடவேண்டும்.