உ.நிசார். மாவனல்ல: பானு பதிப்பகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2013. (மாவனல்ல: எம்.ஜே.எம். பிரின்டர்ஸ், 119, பிரதான வீதி).
32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 130., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-0503-05-6.
சிங்கள மொழிமூலம் கல்விகற்று, தமிழ் இலக்கிய உலகில் குறிப்பாக சிறுவர் இலக்கியத்தில் இதுவரை 16 நூல்கள் வரை எழுதித் தன் பங்களிப்பை வழங்கிவருபவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் உ.நிசார். அவரது புதிய படைப்பாக அமைகின்றது இச்சிறுவர் களுக்கான கதைகளைக் கொண்ட தொகுப்பு. இதில் அழகிய வண்ணச் சித்திரங்களுடன் கூடிய 10 சிறுவர் கதைகள் உள்ளன. கொக்கரக்கோ சேவல், காகமும் குயிலும், ஒற்றுமையே பலம், காடு கொண்ட நியதி, வல்லவனுக்கு வல்லவன், சுதந்திரம், காவற்காரன், அகத்தின் அழகு முகத்தில் தெரியும், அன்பளிப்பு, அப்பனை மகனே என்றழைக்க வைத்த கழுதை விவகாரம் ஆகிய தலைப்புகளில் படிப்பினையூட்டும் வகையில் அமைந்த கதைகள் இவை. கானகத்தை கதைக்களனாகவும், விலங்குகளைப் பாத்திரங்களாகவும் கொண்டவை. அடர்ந்தகாடகள் ஆண்டாண்டு காலம் உள்வாங்கிக்கொண்ட இக்கதைகளில் வரும் நீதி, நியாயம், தந்திரம், நியதி, எள்ளல், ஏமாற்றம், நகைப்பு என்பவற்றை சிறுவர்களின் இரசனைக்கு விருந்தாக்கவே உள்ளே உள்ள பக்கங்கள் ஒவ்வொன்றாக விரிகின்றன.