கண்ணையா (இயற்பெயர்: மு.இராமையா). வவுனியா: கவியெழில் கவிஞர் கண்ணையா, கலை நிலையம், வீட்டு இல. 05, கணேசபுரம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1999. (வவுனியா: ஆதவன்; கணனி அச்சகம்).
(10), 92 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 20×14 சமீ.
வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளரான கவியெழில் கவிஞர் கண்ணையாவின் எண்சாத்திர நூல். தந்தை செல்வா, இந்திரா காந்தி, நடிகர் எம்.ஜி.ஆர்., ஆகியோருக்கான நினைவஞ்சலிப் பாமாலைகள், கவிதைப் பூக்கள், இன ஐக்கியம் ஆகிய கவிதைத் தொகுப்புக்கள் என்பவற்றைத் தந்த கவிஞர் கண்ணையா எண்ணியல் கைரேகை சோதிடநூல், தனிமூலிகையின் மருத்துவ சாதனை ஆகிய உரைநடை நூல்களையும் வழங்கியவர். ஆசிரியரின் 21 சிறுகதைகளை இந்நூல் உள்ளடக்கியது. குழந்தை பேசுகிறது, கடவுள் தீர்ப்பு, கடமை எது? பேருதவி, வஞ்சம் வஞ்சம் தீர்த்தது, விடா முயற்சி, நெஞ்சம் நெகிழ்ந்தது, கடவுள் கருணை, முயற்சி பலன் தரும், அழகிய பெண்ணால் பெற்ற வரம், தியாக உணர்வுகள், ராட்சத பூதத்தால் வந்த யோகம், திருமணம் ஒரிடம் வாழ்க்கை ஓரிடம், மனித நட்புக்கோர் மனிதன், மனோவின் வாழ்க்கை, இறiவா உன் சித்தம் என் சித்தம், திருந்திய உள்ளங்கள், உயிர் காத்த பெரியார், மகனைப் பெற்ற பாக்கியம், தாய்மை-வாய்மை-மெய்மை, மலர்ந்தும் மலராத பாதி மலர் ஆகிய 21 தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.