த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1B, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 2007. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F-L, 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
(2), 46 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 60., அளவு: 21×15 சமீ.
சிறுவர்களின் சிந்தனையைத் தூண்டும் பன்னிரண்டு சிறுகதைகளைக் கொண்ட நூல். உள்ளதும் போனதும், அறிவு பிறந்தது, தீமை செய்தோருக்கும் நன்மை செய்வோம், நரியும் கோழியும், குரங்கும் ஆட்டுக்கடாவும், சோம்பலை விரட்டுவோம், சிறியோரும் பெரியோரும், நரியும் ஓநாயும், வீண் பெருமை பேசாதே, புகழ்ச்சிக்கு மயங்காதீர், அறிவே அழியாச் சொத்து, சோறா சுதந்திரமா? ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. நூலாசிரியர் இலங்கையில் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 42335).