ஜே.பி.திசாநாயக்கா (சிங்கள மூலம்), மஞசுள கருணாதிலக (ஓவியர்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழாக்கம்). நுகேகொடை: சமித வெளியீட்டாளர்கள், 2ஏ, பீட்டர்ஸ் பிளேஸ், 1வது பதிப்பு, 2004. (மஹரகம: தரஞ்சி பிரின்ட்ஸ், நாவின்ன).
36 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 150., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 955-97859-6-6.
ஒரே ஒரு ஊரிலே என்ற வெளியீட்டுத் தொடரில் வெளிவரும் சிறுவர் இலக்கிய நூல். இந்நூற்றொடரின் நோக்கம் சிறுவர்களை மகிழ்விப்பதற்காக சிங்கள கிராமியக் கதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, பொருத்தமான ஓவியங்களுடன் வழங்குவதாகும். இக்கதைகளை வாசிப்பதால் சிங்களக் கிராமத்தவரின் படைப்பாற்றல் பற்றியும் மட்டுமல்லாமல் தொன்றுதொட்டு வழக்கிலிருந்துவரும் கிராமிய வாழ்க்கை முறைமை பற்றியும் அறிந்து கொள்ளமுடிகின்றது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 97580).