தெனகம சிரிவர்தன (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). ஆனமடுவ: தோதென்ன வெளியீடு, உஸ்வெவ வீதி, 1வது பதிப்பு, 2008. (கனேமுல்ல: ஜயன்ட் பிரின்ட் கிரப்பிக்ஸ், 52 A/1, கலஹிடியாவ).
viii, 142 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-1848-11-8.
மாத்தறையைச் சேர்ந்த தெனகம சிரிவர்த்தன தமிழ் சிங்கள நட்புறவிற்கான இலக்கியப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுவரும் மனிதநேயப் படைப்பாளி. பாலம் என்ற பத்தியின் மூலம் தமிழ் எழுத்தாளர்களை சிங்கள இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்துவருபவர். இவரது நாவலான குருதட்சணை சிங்கள மொழியில் மூன்று பதிப்புகளைக் கண்டன. 1994இல் தேசிய இலக்கிய விருதினைப்பெற்ற இந்நாவல், அர்ப்பணிப்புள்ள ஒரு ஆசிரியரையும் அவரின்மீது அபிமானம்கொண்ட மாணவர்கள் சிலரையும் சுற்றி நகர்கின்றது. ஆசிரியராகப் பணியாற்றிய தெனகம 1980 ஜுலை வேலை நிறுத்தத்தையடுத்து குடும்பத்துக்கான பொருளாதார வளத்தைப் பெறுவதற்காக சந்தையில் அரிசி மற்றும் தேங்காய், சின்ன வெண்காயம், கருவாடு போன்றவற்றை விற்றுவந்த வேளையில் சந்தைக்குத் தாய்மாருடன் வரும் தனது மாணவர்கள் தன்னிடம் காட்டிய மரியாதையையும், அன்பையும் உணர்வுபூர்வமாக அனுபவித்தவர். தனது அனுபவங்களின் தேட்டத்தினைப் பயன்படுத்தி இந்நாவலை எழுதியுள்ளார்.