10451 சங்கமம்: இளைஞர் நாவல்.

ரஞ்சித் தர்மகீர்த்தி (சிங்கள மூலம்), எம்.எச்.எம். யாக்கூத் (தமிழாக்கம்). ஆனமடுவ: தோதென்ன பப்ளிஷிங் ஹவுஸ், உஸ்வெவ வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (கனேமுல்ல: ஜயன் பிரின்ட் கிராப்பிக்ஸ், 51, ஏ/1, கலஹிடியாவ).

86 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-1848-41-5.

ரஞ்சித் தர்மக்கீர்த்தி நாடறிந்த படைப்பாளி. நாவல், சிறுகதை, தழுவல் என நிறையவே எழுதியிருக்கிறார். இவர் அரச விருது பெற்ற ஒரு நாடகக் கலைஞரும்கூட. இலங்கையில் பரிசுபெற்ற  ‘அஹஸ பொலவ லங்வெலா’ (வானமும் பூமியும் நெருங்கிவருகின்றன) என்ற இவரது சிங்கள இளையோர் நாவல் இங்கு ‘சங்கமம்’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அபூர்வ நிகழ்வு, ஊர்ச் செய்திகள், வீடுகளும் மாடி வீடுகளும், வந்ததே ஓர் இக்கட்டு, பாட்டி சொன்ன கதைகள், அணிலின் பிரிவு, விமான நிலையப் பயணம், மோட்டார் வாகனத்தில் எலிக் குடும்பம், அணில் குஞ்சுகள் பட்டினியில், கூடு வீட்டை வந்தடைந்தது, இராசதானியின் அரச குடும்பம்  ஆகிய 11 அத்தியாயங்களில் இந்நாவல் விரிகின்றது. ரஞ்சித் தர்மகீர்த்தியின் நூல்களுள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் நூல் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்