யசோதா பாஸ்கரன். யாழ்ப்பாணம்: நிலா பதிப்பகம், 70/1, வைமன் வீதி, 1வது பதிப்பு, மே 2003. (கொழும்பு 12: பேர்பெக்ட் பிறின்டேர்ஸ், 130, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
(4), 52 பக்கம், விலை: ரூபா 70.00, அளவு: 23×15 சமீ.
நான்காம் தரத்தில் கற்கும் மாணவர்களின் எழுத்தாற்றலையும் மொழி அறிவையும் விருத்திசெய்யும் வகையில் ஆக்கப்பெற்ற கட்டுரைத் தொகுப்பு. எனது வீடு, எனது அம்மா, எனது அப்பா எனத் தொடங்கி, மயில், பழங்கள், சந்திரன், எனத் தொடர்ந்து ஒழுக்கம் உயர்வு தரும், தொலைக்காட்சியின் பயன், கடிதம் எழுதுதல் எனப் பல்வேறு தலைப்புகளில் சிறார்களின் சிந்தனை விருத்திக்கும் மொழித்திறன் விருத்திக்கும் உதவும் வகையில் அவர்கள் சொற்களை ஒழுங்குபடுத்திச் சிந்தித்துக் கட்டுக்கோப்பான முறையில் கட்டுரை எழுதும் ஆற்றலை படிப்படியாக விருத்திசெய்யும் வகையில் ஐம்பது கட்டுரைகளை இந்நூலில் வழங்கியிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29886).