அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). வவுனியா: இந்து மாமன்றம், பூங்கா வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (வவுனியா: சுதன் அச்சகம்).
(8), 20 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 20.5×14.5 சமீ.
யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றிய ஆறுமுக நாவலர் பற்றிய சிறுவர்களுக்கேற்ற வரலாற்று நூலாக இச்சிறு நூல் அமைகின்றது. நாவலர் பற்றிய அடிப்படைத் தகவல்களை சிறுவர் விரும்பி வாசிக்கும் வகையில் இந்நூலில் பொதிந்து வைத்துள்ளார் இந்நூலின் ஆசிரியர். ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 – டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்.