10465 பாரதச் சுருக்கம்.

ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை. யாழ்ப்பாணம்: ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை, நாவலர் கோட்டம், மானிப்பாய், 3வது பதிப்பு, 1931, 1வது பதிப்பு, 1903. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்).

(4), 176 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 20×14 சமீ.

இது யாழ்ப்பாணத்து மானிப்பாய் ஆ.முத்துத்தம்பிப் பிள்ளையால் செய்து, மதுரைத் தமிழ்ச்சங்க ஸ்தாபகரும் பாலவநந்தம் ஜமீந்தாருமாயிருந்தவருமாகிய ஸ்ரீ ராஜ ராஜ பொ.பாண்டித்துரைத் தேவரவர்கள் திராவிட பாஷாபிமான ஞாபக சின்னமாகச் சமர்ப்பித்தது.

பாரதச் சுருக்கம்.

ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல.7, 57ஆவது ஒழுங்கை, 10வது பதிப்பு, 2015., 1வது பதிப்பு, 1903. (கொழும்பு 6: ஹரே பிரின்டர்ஸ், 36, ஸ்டேசன் வீதி).

(2), viii, 177 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 20×14 சமீ.

மனித படைப்புகளில் தனியிடம் மகாபாரதத்திற்கு உண்டு.  மகாபாரதமானது, கல்வி, அறிவு, அரசியல், ஒழுக்கம், ஒற்றுமை, தைரியம் எனப் பலவற்றையும் போதிக்கும்  ஒரு இதிகாசமாகும். அவ்வாறானதொரு படைப்பினை நாவலர் கோட்டம் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் (ஏப்ரல் 18, 1858 – நவம்பர் 2, 1917, மானிப்பாய், யாழ்ப்பாணம்) 1903 இல் இளம் வாசகர்களுக்காக எழுதியிருந்தார். அந்நூலின் கொழும்புத் தமிழ்ச்சங்க மீள்பதிப்பு இதுவாகும். இலகு மொழிநடையில் அமைந்துள்ள இந்நூலின்; பின்பகுதியில் அரும்பதவுரையும் கொண்டதாக எழுதப்பட்டிருந்தது. இந்நூல் இலங்கை கல்வித் திணைக்களத்தின் 1966, 1967, 1968ஆம் ஆண்டுகளுக்குரிய கல்விப் பொதுத் தராதர வகுப்பின் பாடநூல்களுள் ஒன்றாக விளங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

12A36 பாரதச் சுருக்கம்.

ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, காங்கேசன்துறை வீதி, மீள்பதிப்பு, 1979, 3வது பதிப்பு, 1931, 1வது பதிப்பு, 1903. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம், இல. 310, மணிக்கூண்டு வீதி).

v, 210 பக்கம், விலை: ரூபா 10.00, அளவு: 21×14 சமீ.

இது யாழ்ப்பாணத்து மானிப்பாய் ஆ.முத்துத்தம்பிப் பிள்ளையால் செய்து, மதுரைத் தமிழ்ச்சங்க ஸ்தாபகரும் பாலவநந்தம் ஜமீந்தாருமாயிருந்தவருமாகிய ஸ்ரீ ராஜ ராஜ பொ.பாண்டித்துரைத் தேவரவர்கள் திராவிட பாஷாபிமான ஞாபக சின்னமாகச் சமர்ப்பித்தது. மனித படைப்புகளில் தனியிடம் மகாபாரதத்திற்கு உண்டு.  மகாபாரதமானது, கல்வி, அறிவு, அரசியல், ஒழுக்கம், ஒற்றுமை, தைரியம் எனப் பலவற்றையும் போதிக்கும்  ஒரு இதிகாசமாகும். அவ்வாறானதொரு படைப்பினை நாவலர் கோட்டம் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் (ஏப்ரல் 18, 1858 – நவம்பர் 3, 1917, மானிப்பாய், யாழ்ப்பாணம்) 1903 இல் இளம் வாசகர்களுக்காக எழுதியிருந்தார். அந்நூலின் பின்னைய உப பாடநூல்வரிசைப் பதிப்பு இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10301. முன்னைய பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 10465)

ஏனைய பதிவுகள்