ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, நவம்பர் 2014. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
iv, 74 பக்கம், சித்திரம், விலை: ரூபா 180., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-98211-2-0.
கலாபூஷணம் கேணிப்பித்தன் ச.அருளானந்தம் இரு பகுதிகளாக எழுதிய சிறுவர்களுக்கான கட்டுரைகளைக் கொண்ட நூலின் இரண்டாம் பகுதி. கட்டுரை எழுதும் முறை, என் பெயர் இராமன், எங்கள் வீடு ஒரு பல்கலைக்கழகம், நான் வாழும் ஊர் என இன்னோரன்ன 32 தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.