அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). வவுனியா: முத்தமிழ்க் கலாமன்ற வெளியீடு, 1வது பதிப்பு, ஆனி, 1996. (வவுனியா: சுதன் அச்சகம்).
xii, 88 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 19×12.5 சமீ.
கவிஞர் அகளங்கனின் அழகுதமிழ்க் கவிதைகள். ‘ஆசி அருளி’ முதல் ‘அன்னையவள் பாதம் வாழ்க’ ஈறாக 35 கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். வளமான வன்னிப் பிரதேசத்தைத் தளமாகக் கொண்டு வடிக்கப்பெற்ற பல கவிதைகளை இத்தொகுப்பில் காணமுடிகின்றது. தான் வாழ்ந்த வன்னிப் பிரதேசத்தை உன்னிப்பாக அவதானித்து, அணுவணுவாக அதனை இரசித்து, அதிலேயே தானும் லயித்து எம்மையும் பூரிக்கவைக்கின்றார். வன்னிநாட்டின் வளத்தை, அங்குள்ள கிராமியச் செல்வங்களை, மனதைத்தொடும் இயல்பான வாழ்க்கை முறைகளை மிகநேர்த்தியாக நம்முன்னால் கவிதைத் தூரிகை கொண்டு தீட்டியிருக்கிறார்.