வன்னி மைந்தன். லண்டன்: எதிரி இணையம், 1வது பதிப்பு, 2014. (லண்டன்: ஆர்.எஸ். பிரின்டர்ஸ், 88 Horsenden Lane North, Greenford, Middlesex UB6 7QH).
(5), 113 பக்கம், விலை: ஸ்டேர்லிங் பவுண் 2., அளவு: 20.5×14.5 சமீ.
வன்னிமைந்தன் (தனபாலசிங்கம் தயாளன்) இலங்கையில் முரசுமோட்டையைப் பிறப்பிடமாகக்கொண்டவர். தனது 17ஆவது வயதில் ஒல்லாந்து தேசத்திற்குப் புலம்பெயர்ந்தவர். சில ஆண்டுகளின் பின்னர் அங்கிருந்து லண்டனுக்கு வந்து வாழ்ந்து வருகிறார். அங்கு www.ethiri.com என்ற இணையத்தளத்தை நிறுவி இயக்கியும் வருகிறார். புலிகளின் குரல், நாடுகடந்த தமிழீழ அரசு ஆகியவற்றின் ஊடகங்களில் இவரது கவிதைகளும் இசைப்பாடல்களும் வெளிவந்துள்ளன. இவரது பாடல்கள் பல தேனிசை செல்லப்பாவின் குரலில் இன்றும் ஒலித்துவருகின்றன. ஈழவிடுதலைப்போராட்டத்தில் தீவிர ஆர்வம்கொண்ட இவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.