யாழ்வாணன். (இயற்பெயர்; நா.சண்முகநாதன்). யாழ்ப்பாணம்: நா.சண்முகநாதன், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை).
(2), 34 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 18×12.5 சமீ.
இந்நூலில் அறிஞர் அண்ணாதுரை (15.9.1909-03.02.1969) தொடர்பான பல்வேறு ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. காரை.செ.சுந்தரம்பிள்ளை (அருமை அண்ணன் அன்பு மன்னன்), இநாகராஜன் (தண்ணார் தமிழ் தந்த அண்ணா), வே.ஐயாத்துரை (முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்), வே.குமாரசாமி (தமிழே ஆனாய்), அல்வை த.சுந்தரம் (இருக்கின்றார்), சிவலிங்கன் (முத்தமிழும் இத்தரையில் வாழவேண்டும்), க.மனோகரன் (ஆறுதலளிக்க யாருளராம்), விண்ணின் விளக்கு (ம.பி.யேக்கப்), செந்தமிழ்த்தாய் செய்தாளோ கொடிய பாவம் (வ.சிவராசன்), ஆறுகோடி மனிதர் (காசி. ஆனந்தன்), வி.கந்தவனம் (மாறிடா உறுதிக்கு மலையெங்கும் செல்லும்). தமிழ்நாடன் (எந்தப் புற்றில் எது)ஆகிய கவிஞர்களின் கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 8417).