அஷ்ரபா நூர்தீன். திருக்கோணமலை: நீங்களும் எழுதலாம், 103/1, திருமால் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2012. (திருக்கோணமலை: யெஹியா அட்வர்டைசிங்).
80 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ.
1982இல் தன் இலக்கியப் பிரவேசத்தை மேற்கொண்ட கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஆசிரியரின் முதலாவது கவிதைத் தொகுதியாகவும் ‘நீங்களும் எழுதலாம்’ சஞ்சிகையின் நூல்வெளியீட்டுத் திட்டத்தின் 3ஆவது நூலாகவும் வெளிவந்துள்ளது. விருத்தம் தொடங்கி பல்வகைச் சிந்து வடிவங்களைப் பரிசோதிக்கும் முயற்சியாக அமைந்துள்ள மரபுக் கவிதைகளும், உள்ளார்ந்த ஓசை, அந்நியமாகாத அளவான படிமம், குறியீடு, வாசகருடன் நெருக்கமான தொடர்பு, மொழிச்சிறப்பு, சிந்தனைத் தெளிவு முதலான நல்லியல்புகளுடன் கூடிய புதுக்கவிதைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மற்றைய பெண் கவிஞர்கள் கைவைக்காத பகுதிகளை இவர் கவனிப்புக்குள்ளாக்குகின்றார். வேலைப்பளு, ஆண்களின் பாலியல் துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு மத்தியில் குழந்தைகளை வளர்த்தெடுப்பதில் ஒரு பெண் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றப் பேசியிருப்பது இதற்கொர் உதாரணமாகும். பொதுவாகப் பெண்களை சமூக அநீதிக்கெதிராகக் கிளர்ந்தெழச் செய்யும் எழுத்துக்கள் இவரடையவை.