மாலினி (இயற்பெயர்: மேரி மெக்டலீன் ஜெயக்கொடி). வவனியா: திருமதி மேரி மெக்டலீன் ஜெயக்கொடி, ஆசிரியர், கலைமகள் மகா வித்தியாலயம், நெளுக்குளம், 1வது பதிப்பு, 2013. (வவனியா: ஜீ.எச். அச்சகம்).
xvi, 78 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
இளம்வயதிலிருந்தே கவிதைத் துறையில் ஈடுபாடுகொண்டிருந்த இக்கவிஞர், தனது அனுபவ முதிர்ச்சியின் பின்னணியில் தான் கண்ட வலிகள், எதிர்பார்ப்புக்கள், ஏமாற்றங்கள், உண்மையற்ற தன்மைகள், இதயத்தின் நெருடல்கள், சமூகத்தின் அவலங்கள் என்பவற்றை கவிதைகளாக்கி இதய தாகத்தைத் தீர்த்துக்கொள்ள முனைந்திருக்கிறார். என்நெஞ்ச நாயகா எனத் தொடங்கி, சுந்தரனே என் தமிழே எனத் தமிழைப்பாடி, தொடர்ந்து ஆசான், தாய்மை, காற்றே உன்னுடன் ஒரு நிமிடம், என் ஊர், வீதி விபத்துக்கள், கல்லறைப் பூக்கள், மனிதனின் நிறம், ஓ வெண்ணிலாவே, நவ(அ)நாகரீகம், சுகமான சுமைகள், ஆடைத் திருவிழா, காதல், பரணி உண்ட தரணி, பெண்ணியம், குற்றுயிரான குடும்ப வாழ்வு, மருந்தும் விருந்தும், பிரியமானவளே, தொலைபேசியால் தொலைந்த உறவுகள், உன்னுடன் சில வரிகள், பயணம் தந்த பரிசு, ஹோட்டலில் கொண்டாட்டம், கருவறையில் ஒரு புலம்பல் என்று தொடர்ந்து முத்தாய்ப்பாக கடவுளும் கவிதையும் என்று தனது உள்ளத்தில் ஊற்றெடுத்த 25 கவிதைகளை இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.