10483 இப்படிக்கு இதயம்: காதல் கவிதைகள்.

இ.சபா (புனைபெயர்: சொற்சிற்பி). மட்டக்களப்பு: எய்ம் பப்ளிஷர்ஸ், வம்மிகேணி வீதி, செட்டிபாளையம், 1வது பதிப்பு, மார்ச் 2012. (யாழ்ப்பாணம்: சாயிராம்; பிரின்டர்ஸ், சங்கானை)

102 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-53369-1-8.

‘ஆதாம் -ஏவாள் இருவர் விழிகளின் பிரசவம்தான் காதலா? என்கிற கேள்வி எழுகிறது. இராத்திரியை பகலாக்கிக் கொண்டிருக்கும் இமைகளுக்கும்-கனவுகளில் இதயம் வளர்க்கும் உள்ளங்களுக்கும் எனது பணிவான வேண்டுகோள். நான் படைத்திருக்கின்ற இந்த குறுங்கவிதைகளுக்குரிய தலைப்புக்களை உங்களிடமே விட்டு விடுகிறேன். பொருத்தமான தலைப்புகளை நீங்களே இடுவீர்கள் என்ற நம்பிக்கையில் மட்டும். இதமான இதயமும்-இனிமையான காதலும், தொலைந்த காதலும்-தொலையாத நினைவுகளும், தொலையாத காதலும்- தொல்லையான உறவுகளுமாய் வாழுகின்ற காதலர்களிடம் ‘இப்படிக்கு இதயம்’ என்கிற எனது நவீன கவிதைத் தொகுப்பை ஒப்படைக்கிறேன்.’ –ஆசிரியரின் முகவுரையிலிருந்து.

ஏனைய பதிவுகள்